விண்கலம் சேதம் : விண்வெளியில் சிக்கிய சீன வீரர்கள் - மாற்று விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட 3 சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்பினர்.

விண்வெளியில் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு சீன விண்வெளி வீரர்களான சென் டோங், சென் ஜோங்ருய். வாங் ஜீ ஆகியோர், ஷென்சோ-20 விண்கலம் மூலம் கடந்த மே 3ம் தேதி ஆய்வுக்காக சென்றனர். ஆய்வு முடிந்து கடந்த 5ம் தேதி பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டு இருந்த  நிலையில், விண்கலத்தின் மீது, விண்வெளி குப்பைகள் மோதியதில் சேதம் ஏற்பட்டு அவர்கள் பூமிக்கு திரும்புவது ஒத்தி வைக்கப்பட்டு மேலும் 9 நாட்கள் அங்கேயே தங்க நேரிட்டது. இந்நிலையில், அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட ஷென்சோ-21 என்ற விண்கலம் மூலம் 3 வீரர்களும், வடக்கு சீனாவில் உள்ள மங்கோலியாவின் டோங்பெங் தரையிறங்கு தளத்தில் பத்திரமாக தரையிறங்கினர்.

Night
Day