போட்ஸ்வானா சென்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசுமுறைப் பயணமாக தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, முதல் கட்டமாக அங்கோலா சென்றார். தமது பயணத்தின் அடுத்தகட்டமாக அவர் போட்ஸ்வானா நாட்டுக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, தலைநகர் கபோரோனில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் போட்ஸ்வானா அதிபர் டுமா கிடியோன் கலந்து கொண்டார். இந்திய குடியரசு தலைவர் ஒருவர் போட்ஸ்வானா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் செல்வது இதுவே முதல்முறையாகும்.  இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், எரிசக்தி விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ள குடியரசு தலைவர் திளெரபதி முர்மு, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

Night
Day