வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை குடிமக்களுக்கு பிரித்துக் கொடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை குடிமக்களுக்கு பிரித்துக் கொடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர, பிற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் 2,000 டாலர் வழங்கப்படும் என ட்ரம்ப் கூறியுள்ளார். பிற நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து இந்த நிதி வழங்கப்படும் என கூறியுள்ள ட்ரம்ப், வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள் எனவும் சாடி உள்ளார். உலகிலேயே பணக்கார மற்றும் மதிப்புக்குரிய நாடு அமெரிக்க என தெரிவித்துள்ள ட்ரம்ப், பணவீக்கம் இல்லாமலும் பெரும் அளவில் பங்குச் சந்தை மதிப்பீடு கொண்ட நாடாகவும் திகழ்கிறோம் என்றுள்ளார். மேலும் அரசாங்கத்தின் நிதி முடக்க நிலை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என்றும் டொனால்ட் டிரம்ப் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை என அபர் கூறியிருக்கிறார்.

Night
Day