நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டுமிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர்கள் அரவிந்த் சாமி, கங்கை அமரன், லிவிங்ஸ்டன், எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பல்வேறு திரைபிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேர சோதனையில்  மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

Night
Day