Forever Our தளபதி, Thank You ஜடேஜா- போஸ்டர் வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிரேடு முறையில் ராஜஸ்தான் அணிக்கு செல்லும் ஜடேஜாவுக்கு போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். அவர் முழு சம்மதத்துடனேயே ராஜஸ்தான் அணிக்கு செல்வதாகவும் விளக்கமளித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து ட்ரேடு முறையில் சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே, அதற்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஷாம் கரணை வழங்கி இருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

இந்நாள் வரை சிஎஸ்கேவில் தளபதியாக இருந்த ஜடேஜா ராஜஸ்தானுக்கு செல்வதால் சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளநிலையில், ஜடேஜாவுக்காக நன்றி தெரிவித்து போஸ்டர் மற்று வீடியோ வெளியிட்டுள்ளது சென்னை அணி நிர்வாகம். சென்னை அணி வெளியிட்டுள்ள பதிவில் 'எப்போதுமே நீங்கள் எங்கள் ராஜா, தளபதி, மஞ்சள் ராஜ்ஜியத்தை காத்த வாள், என்றும், மஞ்சள் ஜெர்சியின் வரலாற்றில் உங்கள் பெயர் என்று எதிரொலிக்கும், தேங்க் யூ ஜடேஜா' என புகழாரம் சூட்டியுள்ளது. 

சிஎஸ்கே அணிக்காக 12 ஐபிஎல் சீசன்களில் 200 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, தனது பேட்டிங்காலும், பவுலிங்காலும் பலமுறை கோப்பையை முத்தமிட காரணமாக இருந்துள்ளார். எந்த நிர்பந்தமும் இல்லாமல், முழு சம்மதத்துடனேயே அவர் ராஜஸ்தான் அணிக்கு செல்வதாகவும் சென்னை அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Night
Day