தங்கம் வென்ற கபடி வீரர், வீராங்கனை புரட்சித்தாய் சின்னம்மாவுடன் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளம் வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா, இளம் வீரர் அபினேஷ் ஆகியோரை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் அழைத்து பரிசுப்பொருட்கள் வழங்கி பாராட்டினார்.

ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரே வீராங்கனையான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த துணை கேப்டன் கார்த்திகா மற்றும் இந்திய ஆண்கள் பிரிவில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரே வீரரான திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோரை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். 

தொடர்ந்து இளம் வீராங்கனை கண்ணகிநகர் கார்த்திகா, இளம் வீரர் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்கு பூங்கொத்தும், பரிசுப்பொருள் கொடுத்தும் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தாங்கள் வென்ற தங்கப் பதக்கத்தை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் காண்பித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அந்த பதக்கத்தை அவர்களது கழுத்தில் அணிவித்து புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்தினார்.

இந்த சந்திப்பின்போது இளம் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுடன், தமிழ்நாடு மகளிர் கபடி அணி கேப்டனான வீராங்கனை ‎சுஜி, கார்த்திகாவின் சகோதரியும், தமிழ்நாடு மகளிர் சப் ஜூனியர் அணி கேப்டனுமான ‎காவியா மற்றும் கார்த்திகாவின் பயிற்சியாளர் ‎ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோன்று ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த அபினேஷ் மோகன்தாஸ் உடன் அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கபடிக்குழு உறுப்பினர் ஞானஸ்கந்தர் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், அனைவரும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, பயிற்சி மையம் மற்றும் வாகன வசதி செய்துதர வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் இளம் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா, இளம் கபடி வீரர் அபினேஷ் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை விடுத்தனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்ததும், அவர்களது பாராட்டும் தங்களுக்கு ஊக்கமும் அளிப்பதாக இளம் வீராங்கனை கார்த்திகா, இளம் வீரர் அபினேஷ் மற்றும் உள்ளூர் கபடிக்குழு உறுப்பினர் ஞானஸ்கந்தர் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Night
Day