இளம் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா, இளம் வீரர் அபினேஷுடன் கலந்துரையாடிய புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மா திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்ததோடு, விளையாட்டுத்துறையையும் மேம்படுத்தியதாக இளம் வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் இளம் வீரர் அபினேஷ் ஆகியோருடன் கலந்துரையாடியபோது அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதத்துடன் கூறினார்.

ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் இளம் வீரர் அபினேஷ் ஆகியோரை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தினார். அப்போது அவர்களுடன் கலந்துரையாடிய புரட்சித்தாய் சின்னம்மா, மாண்புமிகு அம்மா ஆட்சியில்தான் திறமையான விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்பட்டதாகவும், விளையாட்டுத்துறை மேம்படுத்தப்பட்டதாகவும் பெருமிதத்துடன் கூறினார். 

அதேபோன்று விளையாட்டு வீரர்கள் ஒரு இடத்தில் தங்கி தங்களுடைய விளையாட்டு திறமையை மேம்படுத்த அனைத்து வசதிகளையும் மாண்புமிகு அம்மா செய்து கொடுத்ததையும் புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிற்காக தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாடுவது என்பது பெருமைக்குரியது என குறிப்பிட்ட புரட்சித்தாய் சின்னம்மா, உங்களைப் போன்ற வீரர், வீராங்கனைகளை காண்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மென்மேலும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்றும் வீரர், வீராங்கனைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்தார்.

Night
Day