53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக, நீதிபதி சூர்ய காந்த் இன்று பதவி​யேற்​றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர் கவாய் கடந்த மே மாதம் முதல் நேற்று வரை பதவியில் இருந்தார். உச்சநீதிமன்ற மரபின்படி பதவி ஓய்வுபெறவுள்ள தலைமை நீதிபதி, அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைக்க வேண்டும். அதன்படி கடந்த அக்டோபர் 27ம் தேதி அன்று, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சூர்யகாந்த் பெயரை தலைமை நீதிபதி பொறுப்புக்கு மத்திய அரசிடம் பி.ஆர் கவாய் பரிந்துரைத்தார். அதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அக்டோபர் 30ம் தேதி உச்சநீதிமன்ற 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தை நியமனம் செய்வதாக அரசாணை வெளியிட்டது. 

இதனை தொடர்ந்து இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்வில், குடியரசு துணை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று முதல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்று பணியை தொடங்கியுள்ள சூர்யகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day