ஜி20 மாநாடு-பிரதமர் மோடியை கட்டியணைத்த உலக தலைவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை  தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உற்சாகத்துடன் வரவேற்றார்.

ஜி20 அமைப்​புக்கு நடப்பாண்டில் தென்​னாப்​பிரிக்கா தலைமை வகிக்​கிறது. அதன்​படி தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்​னஸ்​பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்​கியது. இதில், ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உற்சாகத்துடன் வரவேற்றார்.

இதை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பல்வேறு முக்கிய உலக நிகழ்வுகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு, ‘ஒற்​றுமை, சமத்​து​வம் மற்​றும் நிலைத்​தன்​மை' என்ற கருப்பொருளை கொண்டு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ‘ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம்' என்ற இந்​தி​யா​வின் தொலைநோக்​குப் பார்வையை எடுத்​துரைக்க இருப்பதாக ஏற்கனவே பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day