சூறைக்காற்றுடன் பெய்த மழை - ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதம் - விவசாயிகள் கவலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தில்  சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
சேரன்மாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் சூறைக்காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதன் காரணமாக மேலச்செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. வாழை மரத்தின் சேதத்தை ஆய்வு செய்து வேளாண் அதிகாரிகள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day