100 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீர் வடிய வழியின்றி நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 100 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீர் வடிய வழியின்றி நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

காரியாபட்டினம், மகாராஜபுரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வடிகால் வசதியில்லாத நிலையில்கனமழை காரணமாக வடிகால் வசதியில்லாததால் 100 ஏக்கர் நிலத்தில் மழைநீர் புகுந்ததால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்கி வடிகால் வசதியை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day