டெல்லி கார் வெடிப்பு விசாரணையில் முக்கிய திருப்பம் - ரூ.6.5 லட்சத்திற்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கிய டாக்டர் முசம்மில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை, சம்பவம் தொடர்பாக டாக்டர் முசம்மில், அதில் ராதர், ஷாஹீன் ஷாஹித் மற்றும் மவுல்வி இர்பான் அகமது வாகே ஆகியோரை கைது செய்து 10 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி அதிலின் லாக்கரில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Night
Day