கொலை வழக்கில் ரவுடி விஜயகுமார் சுட்டுப்பிடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ரவுடி மௌலி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

சென்னை அபிராமிபுரம் விசாலாட்சி தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மௌலி என்ற ரவுடி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விஜயகுமார் மற்றும் கௌதம், நிரஞ்சன் ஆகிய 3 பேரை அபிராமிபுரம் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விஜயகுமார் என்பவரை அடையாறு இந்திரா நகர் ரயில்நிலைப் பகுதியில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் பிடிப்பதற்காக சென்றனர். 

போலீசாரைக் கண்ட விஜயகுமார் தப்பிப்பதற்காக தான் வைத்திருந்த அரிவாளால் காவலர் தமிழரசன் என்பவரை தாக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் அம்பேத்கர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் விஜயகுமாரின் முழங்காலில் சுட்டுப்பிடித்தார். காயமடைந்த விஜயகுமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இந்திரா நகர் ரயில் நிலையப் பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Night
Day