பழைய கார் விற்பனை ஷோரூமை சேதப்படுத்தி ஊழியரை தாக்கியவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை வண்ணாரப்பேட்டையில் பழைய கார் விற்பனை செய்யக்கூடிய நிறுவனத்தில் மர்மநபர்கள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் ஒரு ராபின்சன் என்பவர் பழைய கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், கார் விற்பனை குறைந்து வந்ததாக கூறப்படுகிறது. அருகில் உள்ள கார் ஷோரூமில் பழைய கார் வாங்கிக் கொண்டு புதிய கார் விற்பனை செய்வதே, தனது பழைய கார் விற்பனை குறைந்ததற்கு காரணம் என நினைத்த ராபின்சன், கார் ஷோரூமின் பழைய கார் விற்பனை நிலையத்திற்கு 3 பேருடன் சென்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், அந்நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களையும் தாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ராபின்சனை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதனிடையே புகார் அளித்த நபருக்கும், கார் நிறுவனத்திற்கும் மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

varient
Night
Day