சின்னம்மாவின் நலத்திட்ட உதவிகள் - முள்ளங்குறிச்சி பயனாளிகளிடம் ஒப்படைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அளித்த தையல் இயந்திரங்கள், புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவியை பெற்றுக்கொண்ட பயனாளிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வாணக்கன்காடு பகுதியில் அஇஅதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். விழாவில் புரட்சித்தாய் சின்னம்மா அளித்த தையல் இயந்திரங்கள், வேளாண் பணிகளுக்கான மருந்து தெளிப்பான்கள் ஆகியவை பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புரட்சித்தாய் சின்னம்மா அளித்த 50 தையல் இயந்திரங்கள், கறம்பக்குடி தாலுகா முள்ளங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு, சாலுவன் விடுதி, சாந்தம்பட்டி, செட்டி விடுதி, முள்ளங்குறிச்சி, சூரக்காடு, கருப்பக்கோன் தெரு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.

தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட முள்ளங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த பயனாளிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Night
Day