ராமநாதபுரத்தில் 3 நாட்களில் அரங்கேறிய 3 கொலைகள் : சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சமையல் மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் 3 நாட்களில் அடுத்தடுத்து 3 படுகொலை நிகழ்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்த அன்சாரி என்பவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்ற அன்சாரி வீடு திரும்பாத நிலையில், ரத்த காயங்களுடன் கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. ரத்த காயங்களுடன் கிடந்த அன்சாரியை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகார் அளித்துள்ள நிலையில், பாம்பன் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், போதை ஆசாமிகள் அன்சாரியை அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 19 ஆம் தேதி பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டது, 20 ஆம் தேதி அகதிகள் முகாமில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு கொலை அரங்கேறியுள்ளது ராமநாதபுரம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

Night
Day