குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள  நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குற்றாலம் மெயின் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து நீர்வரத்து சீராகும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day