மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.4,000-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ முல்லைப் பூ, கனகாம்பரம் மரிக்கொழுந்து போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவை சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று விலை கடுமையாக உயர்ந்து கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தேவை அதிகரிப்பு மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதும் இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

varient
Night
Day