ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கிய மத்திய அரசு - பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பொருட்களின் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பின்னலாடை தொழில் பாதிப்படைந்தநிலையில், மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு பின்னாலடை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டநிலையில், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பால் பின்னலாடை தொழில் கடும் பாதிப்பை சந்தித்தது. 

இந்த நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி உடனடியாக உதவ வேண்டும் என பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஏற்றுமதியாளர் ஊக்குவிப்பு திட்டத்தில் மத்திய அரசு 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

வங்கிகள் கடன்களை வசூலிக்க நிர்பந்திக்கக் கூடாது போன்ற உத்தரவையும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர். 50 சதவீதம் இறக்குமதி வரி பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படுமா என தெரியவில்லை எனவும், அற்கான தீர்வுக்காக காத்திருப்பதாகவும் திருப்பூர் ஏற்றுமதி, உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் செந்தில் வேல் தெரிவித்தார். 

Night
Day