நடிகர் அபிநய் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த துள்ளுவதோ இளமை திரைப்பட நடிகர் அபினய் காலமானார். அவருக்கு வயது 44.

தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான அபினய், தொடர்ந்து ஜங்ஷன், தாஸ் போன்ற சில படங்களில் நடித்தார். விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்த இவர், பட வாய்ப்புகள் இன்றி வருமானத்துக்கு கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டார். சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்த நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் சின்னத்திரை நடிகர் பாலா ஆகியோர் உதவிக்கரம் நீட்டினர். 20 கிலோ எடை குறைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட அபினய், கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Night
Day