ஆஸ்திரேலிய ஓபன் - பட்டம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

சிட்னியில் நடைபெற்று வரும் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதியில் தைவான் வீரரை வீழ்த்திய இந்தியாவின் லக்‌ஷயா சென், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் யூஷி டனகாவை எதிர்கொண்டார். சுமார் 38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21க்கு 15, 21க்கு 11 என்ற நேர் செட் கணக்கில் யூஷி டனகாவை வீழ்த்தி லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் ஆஸ்திரேலிய ஓபனை லக்‌ஷயா சென் வெல்வது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Night
Day