பாரா ஒலிம்பிக் நீச்சலில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி மாணவன் ஆர். சபரி ஆனந்துக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், ஹைதராபாத்தில் நடைபெற்ற 25வது நேஷனல் பாரா ஒலிம்பிக் போட்டியில் சப் ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மூன்று வெவ்வேறு பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்ததன் மூலம் தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ள திருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் ஆர். சபரி ஆனந்துக்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் இந்த இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ள மாணவன் சபரி ஆனந்த், மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day