விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து 1000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் அழுகும் சூழல் - விவசாயிகள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
 
தெற்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகை மாவட்டம் வெள்ளப்பாக்கம், கோபுராஜபுரம், நரிமணம், தேவங்குடி, பணங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சம்பா தாளடி சாகுபடி செய்துள்ள சுமார் 1000 ஏக்கர் அளவிலான விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மேலும், ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறியுள்ள விவசாயிகள், வேளாண்துறை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day