கம்போடியாவில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000வது ஆண்டு விழா மாநாடு விமரிசை

எழுத்தின் அளவு: அ+ அ-

கம்போடியா நாட்டின் சியாம் ரிப் நகரில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா மாநாடு கோலாகலமாக தொடங்கியது. 

அங்கோர் தமிழ்ச்சங்கமும், சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் சிங்கப்பூர் மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இரு நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டின் முதல் நாளில் ராஜேந்திர சோழனின் கடாரம் கொண்டான் ஆயிரமாவது ஆண்டு வெற்றி விழாவும், 2வது நாள் மாநாட்டில் தமிழர் மற்றும் கெமர் மக்களுக்கிடையான பண்பாடு, வரலாறு, வணிக மற்றும் நட்பு உறவுகளை புதுப்பிக்கும் விழாவும் நடைபெறுகிறது. கம்போடிய அரசின் தேசிய கீதம் பாடி, அப்சரா நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் இம்மாநாடு தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Night
Day