15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், தூத்துக்குடி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, கரூர், அரியலூர் மற்றும் மதுரை ஆகிய 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  


Night
Day