வெற்றிகரமான ஜி20 மாநாடு : நிலையான வளர்ச்சியை உருவாக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெற்றிகரமான ஜி20 மாநாடு, இந்த உலகிற்கு வளமான மற்றும் நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். தென்னாப்ரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, அரியவகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பேச்சு நடத்தினார். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி, கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்திய அவர், டெல்லி திரும்பினார்.

இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ்வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என்றும் உலகத் தலைவர்களுடனான தமது சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் ஜி20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப்ரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக பிதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Night
Day