கரூர் துயரம்- த.வெ.க சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்டேசன் கைது - அக்.23 வரை நீதிமன்ற காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் பெருந்துயரம் தொடர்பாக த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்டனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை த.வெ.க.தொண்டர்கள் தடுத்தி நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சமாதானம் செய்வதற்காக உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்களின் அடிப்படையில் வெங்கடேசனை போலீசார் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வெங்கடேசனுக்கு அக்டோபர் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day