"வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக ரூ.2,221 கோடி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினேன்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் 5 மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   கேரளா தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறினார். குறிப்பாக வயநாடு நிலச்சரிவுக்கான நிவாரண நிதி, கேரளாவின் கடன் வாங்கும் வரம்பில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Night
Day