எழுத்தின் அளவு: அ+ அ- அ
பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்துள்ளன. இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. மேலும் பட்டியலினத்தவர், ஓபிசி, முஸ்ஸீம் சமூகத்தில் இருந்து தலா ஒருவரை துணை முதலமைச்சராக்க முன்னிறுத்த திட்டமிட்டு வருகிறது. இந்தியா கூட்டணியின் இந்த புதிய வியூகத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.