டிரம்ப் தலைமையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. காசாவில் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அமைதி உடன்பாடின்படி, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக்கைதிகள், மற்றும் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து, ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்றார். 31 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவாக, அதிபர் ட்ரம்ப் தலைமையில் உலகத் தலைவர்கள் ஆதரவுடன் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Night
Day