தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்று நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தீபாவளியன்று  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

Night
Day