எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அஇஅதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழா வரும் 17ஆம் தேதி வெகு சிறப்பாக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட வாணக்கண்காடு கிராமத்தில் அஇஅதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று சிறப்பிக்குமாறு தஞ்சாவூரில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகியும், வாணக்கண்காடு ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான என்.ரவிச்சந்திரன் தலைமையில் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
பின்னர், புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகிகள் மற்றும் தனியார் ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் ஆட்சியை அமைப்போம் என கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.