மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட ரங்கசாமி குளம் அருகே மர்ம காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சரண்யா தம்பதியின் 2-வது மகள் கார்த்திகா கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காய்ச்சல் சரியாகிவிடும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்திகாவிற்கு காய்ச்சல் அதிகரித்து மயக்க நிலைக்கு சென்றதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். உடனடியாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில மணி நேரத்தில் சிறுமி கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day