ஐபிஎஸ் அதிகாரி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது பிரதமர் மோடியும் ஹரியானா முதல்வர் நயாப் சைனியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஹரியானா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமார்,  ஹரியாணா டிஜிபி  உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக கடிதம் எழுதிவிட்டு, கடந்த 7 ஆம் தேதி  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.  
 
இந்நிலையில் சண்டிகரில் உள்ள புரண்குமார் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியும் மூத்த ஐஏஸ் அதிகாரியுமான அம்நித் பி.குமார் மற்றும் குழந்தைகளுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மிகவும் அறிவாளியாகவும், திறமைசாளியாக இருந்தாலும் பட்டியலினத்தவர் என்றால் அடக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார்கள் என்பதையே காட்டுவதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொள்ளமுடியாதது என்றும் தெரிவித்தார்.

Night
Day