தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய கூடியது என்.டி.ஏ கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடை உறுதி செய்வதற்காக டெல்லியில் என்.டி.ஏ கூட்டம் நடைபெற்றது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் பீகார் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடை உறுதி செய்ய என்.டி.ஏ கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோற் பங்கேற்றனர்.

Night
Day