புரட்சித்தாய் சின்னம்மாவின் கணவருடைய சகோதரர் எம்.ராமசந்திரன் காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கணவர் மறைந்த எம். நடராஜன் அவர்களின் இளைய சகோதரர் எம். ராமசந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி செலுத்தினார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கணவர் மறைந்த எம். நடராஜன் அவர்களின் இளைய சகோதரர் எம். ராமசந்திரன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 74. அன்னாரது இறுதிச் சடங்கு தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி செலுத்தினார். 

varient
Night
Day