மோடியின் தீபாவளி பரிசு - ரூ.35,440 கோடியில் வேளாண் திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேளாண்துறை வளர்ச்சிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்துறை வளர்ச்சிக்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் 11 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான 2 பண்ணைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்துறையின் செயல்பாடுகளால் விவசாயம் தளர்ச்சி அடைந்ததாக கூறினார். தற்போது உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரை வேளாண்துறை மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், விவசாயிகள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். 

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் மானியம் உரங்களுக்காக வழங்கப்பட்டது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 13 லட்சம் கோடி ரூபாயை உரங்களுக்காக மானியமாக வழங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.  

ஜிஎஸ்டி குறைப்பு கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயிகளுக்கு அதிகபட்ச நன்மைகளை அளித்துள்ளது கூறிய பிரதமர் மோடி, உற்பத்திச் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்று கூறினார். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு விவசாயிகளின் பங்கு பெரியது என்றும் அவர் கூறினார். 

Night
Day