ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி பெண்கள் போராட்டம் நடத்தினர். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தட்டநேந்தல் கிராமம் உருவானதில் இருந்தே குடிநீர் வசதி செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது.  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ராஜகம்பீரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சில நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் செய்த  பின்னர் தற்போது வரை குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பெண்கள் உட்பட சுமார் 75 பேர் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கருப்பு கொடி மற்றும் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை தூக்கி வீசினர். 

varient
Night
Day