ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் பிற்பகலில் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 92 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 525 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

மறுபுறம், தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 195 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இன்று 2வது முறையாக மாலையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்தது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 92 ஆயிரத்து 6400 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 580 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மாலை வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 197 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது எழை, எளிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Night
Day