புஷ்பவனம் மீனவ கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே  தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்  தாக்கி மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோடியக்கரை கடலில் புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பைபர் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் வீச்சருவாள், ரப்பர் பைப், கட்டை போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு கத்தியால் தாக்கி ஐந்து மீனவர்களை காயப்படுத்தினர். மேலும் படகுகளில் இருந்த நூறு கிலோ வலைகள், ஜிபிஎஸ்  கருவி ,150 லிட்டர் டீசல், பெட்ரோல், பேட்டரிகள், பத்து மொபைல் போன்கள், 100 கிலோ  மீன்கள் என இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு விரட்டியடித்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் கரைக்கு வந்து அளித்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும காவல்துறையினரும் மீன்வளத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

Night
Day