காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோல்ட்ரிஃப் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில், காஞ்சிபுரம் முதுநிலை மருந்து ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Night
Day