தலிபான் அமைச்சர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிறகு, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தலிபான்கள் அரசு மேற்கொண்டு வரும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற தலிபான் அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் அமைச்சரின் செயலுக்கு பல்வேறு பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Night
Day