தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் விலகக்கூடும் என்றும் வரும் 16-ஆம் தேதிவாக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் கணித்துள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வரும் 19-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

வரும் 16ம் தேதியன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17ம் தேதியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 18ம் தேதியன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதியன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்

வரும் 20ம் தேதியான தீபாவளியன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day