அக். 17-ல் அஇஅதிமுக 54-வது ஆண்டு விழா - புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு வரும் 17ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கண்காடு கிராமத்தில் நடைபெறுகின்றன கழக ஆண்டு விழா நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு வருகின்ற 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், வாணக்கண்காடு கிராமத்தில் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு நடைபெறவுள்ள, கழக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று சிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சமயம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் எனவும் அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் ஜாதி மத பேதமின்றி, அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதாக முகாம் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day