போர்களை நிறுத்துவதற்கான கருவியாக வரி விதிப்பை பயன்படுத்தினேன் - அதிபர் டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட பல சர்வதேச போர்களை நிறுத்துவதற்கான கருவியாக வரி விதிப்பை பயன்படுத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டிரம்ப், வரிகளை அடிப்படையாக வைத்தே சில போர்களை தடுத்து சமரசம் செய்ததாக கூறினார். குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, இரு நாடுகளின் மீதும் 100%, 150% மற்றும் 200% வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலால் தான் இரு நாடுகளும் போரை நிறுத்தியதாக குறிப்பிட்டார். வரிவிதிப்பு என்ற கருவியை தான் கையில் எடுக்கவில்லை என்றால், போரை நிறுத்தியிருக்க முடியாது என தெரிவித்தார். மேலும், வரி விதிப்பை அமெரிக்கா கொண்டிருப்பதால் தான் உலகில் அமைதியை கொண்டு வர முடிந்ததாகவும், இதுவரை 7 சர்வதேச போர்களை நிறுத்தியதாகவும் கூறினார்.

Night
Day