கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததாகவும், வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அம்மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day