எழுத்தின் அளவு: அ+ அ- அ
தங்கம் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலை விலை குறைந்த தங்கம் விலை பிற்பகல் ஏற்றம் கண்டதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ஆயிரத்து 320 ரூபாய் குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் பிற்பகல் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 340 ரூபாய்க்கும் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 90 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மறுபுறம் வெள்ளி விலை காலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகல் மேலும் 4 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 184 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 7 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.