ராஜ ராஜ சோழன் 1040-வது சதய விழா : விமர்சையாக கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரம் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,040வது சதய விழா அரசு விழாவாக நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், 1,040 கலைஞர்களின் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனையடுத்து இரண்டாம் நாளான இன்று கோயில் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பெரிய கோயிலில் இருந்து யானை மீது திருமுறைகள் எடுத்து வரப்பட்டு, திருமுறை வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தலைமையில் பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏரளானமானோர் கலந்து கொண்டனர்.

Night
Day