பாலம் கட்டுமானத்தில் மணலுடன் நிலக்கரி சாம்பல் கலப்பதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானத்தில் மணலுடன் நிலக்கரி சாம்பல் கலந்து கட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விழுப்புரம் - நாகை இடையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல் கொண்டு வந்து கொட்டப்பட்டு, அதனுடன் சவுடு மணல் கலந்து பாலம் கட்டப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் பாலத்தின் உறுதிதன்மை கேள்விகுறியாகியுள்ளதாகவும், விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day