ஷேக்ஹசீனா குற்றவாளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் இன்று தண்டனை அறிவிக்க உள்ளதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை சுட்டுக்கொல்ல ஷேக் ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதை ஆதாரமாக வைத்து அவர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை பதிந்து குற்ற தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வங்கதேசம் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Night
Day